மஹாராஷ்டிராவில் 75 கி.மீ., நீள சாலையை, 105 மணி னேரத்தின் அமைத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மஹாராஷ்டிராவில் அமைந்துள்ள NH53 என்ற தேசிய நெடுஞ்சாலை, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, சத்தீஸ்கரின் ராய்ப்பூர், மஹாராஷ்டிராவின் நாக்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கிறது.
இந்த நெடுஞ்சாலையில் மஹாராஷ்டிராவின் அமராவதி, அகோலா மாவட்டங்கள் இடையே, 75 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி ஜூன் 3, 2022 அன்று காலை 7:27 மணியளவில் துவங்கி, இடையில் நிறுத்தாமல் தொடரப்பட்டு, ஜூன் 7, 2022 அன்று மாலை 5:00 மணிக்கு முடிக்கப்பட்டது. இது மொத்தம் 105 மணி நேரம் 33 நிமிடங்களாகும்.
இது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. NHAI எனப்படும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் 800 ஊழியர்களும், ராஜ் பாத் இன்ப்ராகான் ஒப்பந்த நிறுவனத்தின் 720 ஊழியர்களும் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர். இவர்களுக்கு மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கு முன், கத்தார் நாட்டின் ஆஷ்கால் என்ற இடத்தில் உள்ள அல்கோர் விரைவுச் சாலையில், 27.25 கி.மீ., நீள சாலை 10 நாட்களில் போட்டு முடிக்கப்பட்டதே கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது.
No comments:
Post a Comment